முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக, கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் மீது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனையில் திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலு, கட்சியின் சட்ட வல்லுநர்கள் வில்சன், என்.ஆர். இளங்கோ, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், கடலூர் வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலும் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.