நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி
ஆளுநருடன் திமுக எம்.எல்.ஏ.க்கள் நாளை சந்திப்பு
ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாகவும் கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதங்கள் மீது ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது முடிவை தெரிவிக்காமல் மும்பை சென்றார். ஆளுநர் இன்று மும்பையில் இருந்து சென்னை வந்ததையடுத்து, அவரை சந்திக்க தி.மு.க. நேரம் கேட்டது. நாளை காலை 10.30 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார். எனவே, நாளை காலை 10.30 மணிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர். கனிமொழி எம்.பி.யும் அவர்களுடன் செல்கிறார்.