தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி வெற்றி பெற்றது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து, திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் அதிமுக கட்சி தேனி மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியுள்ளது. புதுவையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதே போல் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் திமுக கட்சி சார்பில் வெளியிட்ட மக்களவை தேர்தல் அறிக்கையில், மாணவர்கள் பெற்ற கல்வி கடன் ரத்து, விவசாயக்கடன் ரத்து உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தனர்.
மக்களவை மற்றும் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக கட்சி உருவெடுத்துள்ளது. இந்நிலையில் 17-வது மக்களவையில் முதல் கூட்டத்தொடரில் முதல் நாளிலேயே கேள்வி நேரத்தில் தமிழக திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குரல் எழுப்பியுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் தமிழக எம்பிக்கள் காரசார விவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. தமிழக மக்களுக்கு திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் எப்போது அந்த கட்சி நிறைவேற்றும் என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.அதன் தொடர்ச்சியாக இளைஞர்களின் கல்வி கடனை திமுக கட்சி எப்போது ரத்து செய்யும் என இளைஞர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வருகின்றன. திமுக கட்சி மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை எப்போது நிறைவேற்றும் என அரசியல் கட்சிகள் ஒரு புறம் பேசி வருகின்றன. இது குறித்து விரைவில் திமுக அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.