Skip to main content

சென்னையில் 5 மண்டலங்களின் நிலை அச்சத்தை தருகிறது... அரசு உணர்ந்ததா இல்லையா? ஸ்டாலின் கேள்வி

Published on 04/06/2020 | Edited on 04/06/2020
dmk stalin report

 

சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு, வீடாய் சென்று பரிசோதனை செய்யவேண்டும். சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழு சிந்தனையும் பயன்படுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.


மேலும், சென்னையில் ராயபுரம் உள்ளிட்ட ஐந்து மண்டலங்களில் கரோனா எண்ணிக்கை அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேச மாநில பாதிப்பைவிட சென்னையில் பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்ததா இல்லையா என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் மாநில பாதிப்பைவிட ராயபுரத்தில் பாதிப்பு மிகமிக அதிகம். உரிய சோதனைகள் உடனே செய்யப்படுவதில்லை. சோதனை முடிவுகள் உடனே சொல்லப்படுவதும் இல்லை. மக்களைக் காக்கும் பணியில் உள்ள மருத்துவ துறையினரை போராடும் நிலையில் அரசு வைத்து இருப்பது வேதனை என தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்