தர்ணா போராட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.
கோவை மாநகராட்சியில் கிழக்கு மண்டலம் முழுவதும் மாதத்திற்கு 2 முறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறி சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்த தர்ணா போராட்டத்தின் போது, குடிநீர் விநிகோகிக்காத மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
குடிநீர் விநிகோகிக்கப்படும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்று அறிவித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தண்ணீர் லாரியை கொண்டு மக்களுக்கான தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என அதிகாரிகள் மட்டத்தில் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
அருள்குமார்