Skip to main content

அனைவருக்கும் பயிர் காப்பீட்டுத்தொகையை வழங்கிடு; கோட்டூரில் தி.மு.க. விவசாய அணி ஆர்ப்பாட்டம்

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

DMK farmers wing protest

 

 

திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகையை விடுபட்ட அனைவருவக்கும் உடனே வழங்கிட வேண்டும் என  முன்னாள் நாகை தி.மு.க. எம்.பி .கே.எஸ்விஜயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியின்போது ஆணைக்கொம்பன் நோய் தாக்குதலால் கடுமையாக சாகுபடி பாதிக்கப்பட்டு, பயிர்கள் நாசமாகின. இதனால் மகசூல் பெரும் இழப்பு ஏற்பட்டது. டெல்டா மாவட்ட விவசாயிகள்  பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். 

 

இந்நிலையில் 2019- 20 ஆண்டில் பயிர்காப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கபட உள்ளது. அந்தப் பட்டியலில் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 29 வருவாய் கிராமங்கள் விடப்பட்டு, அந்த கிராமங்களில் உள்ள சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விடுப்பட்ட வருவாய் கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டுத்தொகையை உடனே வழங்கவேண்டும் என விவசாயிகள் கேட்டுவந்தனர். அதற்கு அதிகாரிகள் வட்டாரத்தில் எந்தவித பதிலும் இல்லை.

 

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் வோளாண்மை விரிவாக்கம் மையம் அலுவலகம் முன்பு தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளரும், முன்னாள் நாகை எம்.பியுமான .கே.எஸ்.விஜயன் தலைமையிலான தி.மு.கவினர் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

ஆர்பாட்டத்தில் 2019-2020 ம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டினை மறு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும்  உடனடியாக வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரபடுத்துவோம்.  எனத் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து மாநில விவசாய அணி செயலாளர் .கே.எஸ் விஜயன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "கடந்த ஆண்டு ஆணைக்கொம்பன் நோய் புகுந்து மொத்த விவசாயத்தையும் பாழாக்கியது. இதனை மத்திய,மாநில அதிகாரிகளும் ஒட்டுமொத்த வேளாண்மை துறை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டுவிட்டு, பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை அரசுக்கு கூறி இழப்பீடு வழங்க வழிசெய்கிறோம் என்று கூறினர், இது அனைத்து பத்திரிகைகளிலும் வந்த உண்மை. அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்கூட பத்திரிகைகளில் வந்துள்ளது. அப்படி பெரும்பாதிப்புக்கு உள்ளாகிய பகுதிகளில் காப்பீடு செய்யப்பட்ட காப்பீட்டுத்தொகையைதான் நாங்கள் கேட்கிறோம். யாசகமாக கேட்கவில்லை. விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை கொடுக்க மறுத்தால் தி.மு.க தலைவரின் வழிகாட்டுதலோடு போராட்டத்தை மேலும் வலுவடைய செய்வோம்," என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்