Skip to main content

துரைமுருகனோடு இந்த சோதனைகள் முடிந்து விட்டதா? திமுக கூட்டணியில் உள்ள பலருக்கும் குறி!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் இரண்டு  நாட்களாக விடிய விடிய நடத்தப்பட்ட வருமானவரி சோதனை திமுகவை மிரள வைத்திருக்கிறது.

 

v

 

சோதனையின் முதல் கட்டமாக 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,  துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சிமெண்ட் குடோனில் நடத்தப்பட்ட சோதனையில்  வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக சாக்கு மூட்டைகளிலும் , துணி பைகளிலும் ,  அட்டைப்பெட்டிகளிலும் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவே வைக்கப்பட்டிருந்தன என்று சொல்லப்படுகின்றது.   
கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் பேப்பர்களால் சுற்றப்பட்டு , வார்டு வாரியாக எண்கள் எழுதப்பட்டு,சம்மந்தப்பட்ட கட்சியினரின் பெயர்கள் எழுதப்பட்டு  வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டு இருந்தன என்று தெரியவந்துள்ளது.     

 

வாக்காளர் பட்டியலும், வார்டு வாரியாக வாக்காளர்கள் பெயர்கள் கொண்ட பட்டியலும் பணத்தோடு இணைக்கப்பட்டு பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக்கண்டு வருமானவரித்துறை அதிகாரிகள், பண விநியோகத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

d

 

 இந்த தொடர் சோதனையின் தொடர்ச்சியாக, துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டிலும் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் ,  ஐந்து கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக,  பெண் வாக்காளர்களை கவர்வதற்காக, விநியோகம் செய்ய  வைக்கப்பட்டிருந்த 25 கிலோ தங்க காசுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பறக்கும்படை வட்டாரத்தினர் மத்தியில் செய்தி உலாவுகிறது. 

 

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிக அளவு பணம் மற்றும் நகைகள் ஆதாரபூர்வமாக  கைப்பற்றப்பட்டு இருப்பதால் இது குறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர் வருமானவரித்துறை அதிகாரிகள் . இதனால்,  வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் கதிர்ஆனந்துக்கு , சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 


இந்த நிலையில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்களிடம் எதிரொலிக்கிறது. இதற்கிடையே, துரைமுருகனோடு இந்த சோதனைகள் முடிந்து விடாது. திமுக கூட்டணியில் உள்ள 'பெரிய மனிதர்கள்' பலருக்கும் குறி வைத்துள்ளது வருமானவரித்துறை என்று தகவல்.
 

சார்ந்த செய்திகள்