
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காணொளி காட்சி வாயிலாக முப்பெரும் விழா நடத்துவது சம்மந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், மாநில விவாசயத் தொழிலாளர் அணித் தலைவர் எல்.மூக்கையா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பெரியகுளம் நகர, ஒன்றிய தி.மு.கவினர் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் முன்னதாகப் பேசிய நகரப் பொறுப்பாளர் எஸ்.பி.முரளி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் உட்பட மாவட்ட பிரதிநிதிகள் சிலரது பெயர்களை உள்நோக்கத்துடன் கூறாமல் விட்டுவிட்டதாகக் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சிறப்பாளர்கள், தொண்டர்கள், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் இருக்கும்போது வாய்த் தகராறு அதிகரித்ததால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.