தி.மு.க. தலைமையில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், விவசாயிகளை வஞ்சிக்கும் மாநில அரசையும் கண்டித்து விருத்தாசலத்தில் தி.மு.க. தலைமையில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் ;
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், கடலூர் நாகை மாவட்டத்தில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் அமைத்து விவசாயிகளை வாழவாதாரத்தை குலைக்கும் தமிழக அரசையும் கண்டித்து விருத்தாசலத்தில் தி.மு.க தலைமையில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம் கோட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல், பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் அமைப்பதை கைவிடல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 4000 வழங்குதல், விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்பு நிலுவை தொகை உடனே வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
தி.மு.க கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா/ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் குழந்தை.தமிழரசன், முத்துக்குமார், விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சுந்தரபாண்டியன்