Published on 17/12/2019 | Edited on 17/12/2019
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
![DMK case in Supreme Court challenging the Citizenship Bill](http://image.nakkheeran.in/cdn/farfuture/SxvI3TjUlW0LZISwsfcrnZ0eWJIhZ9VVJaY1jyw9AZA/1576560779/sites/default/files/inline-images/asasasas_3.jpg)
ஏற்கனவே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தற்போது திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வழக்குகளும் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.