
தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. அன்று பதிவான வாக்குகள், நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் திமுக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 51 இடங்களில் 49 இடங்களை கைப்பற்றியது. அதேபோல் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கொடுக்கப்பட்ட 5 இடங்களை முழுமையாக கைப்பற்றியது. மதிமுக 2 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்தையும், விசிக 1 இடத்தையும், சிபிஐ 1 இடத்தையும், அதிமுக 3 இடங்களையும், அமமுக 1 இடத்தையும், சுயேட்சை வேட்பாளா்கள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
திருச்சியில் உள்ள 5 நகராட்சிகளில் மொத்தம் 120 வார்டுகள் உள்ளன. இதில், 1 வார்டில் போட்டியின்றி வேட்பாளர் வெற்றி பெற்றதால். 119 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக 68 வார்டுகளையும், அதிமுக 27 வார்டுகளையும், சிபிஐ 2 வார்டுகளையும், சிபிஎம் 1 வார்டையும், தேமுதிக 1 வார்டையும், காங்கிரஸ் 1 இடத்தையும் தக்க வைத்தது. மற்றவை 20 வார்டை கைப்பற்றியது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் 2 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், மொத்தம் உள்ள 216 வார்டுகளில், 214 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுக 137 இடங்களை கைப்பற்றியது. அதிமுக 34 வார்டுகளையும், சிபிஐ 1 இடத்தையும், சிபிஎம் 4 இடத்தையும், தேமுதிக 1 இடத்தையும், காங்கிரஸ் 4 இடத்தையும், மற்றவை 35 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன.