Skip to main content

"மத அடிப்படையில் மக்களை பாஜக பிளக்க முயற்ச்சிக்கிறது"- இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு...!

Published on 22/12/2019 | Edited on 22/12/2019

நாகைமாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடைத்தெருவில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜமா அத்துல் உலமா சபை சார்பில், மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இச்சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்த அதிமுக அரசை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

citizenship amendment act issue

 



போராட்டத்தில் பேசிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அனைவரும், குடியுரிமை சட்ட திருத்ததின் மூலம் மத அடிப்படையில் மக்களைப் பிளக்க முயற்சிக்கும் மத்திய அரசு,  அந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் இந்தியாவை 'இந்து ராஷ்டிரம்' ஆக மாற்றியமைக்கும் நோக்கத்தோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும், நாடு முழுவதும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இந்துத்துவ பா.ஜ.க அரசு குடியுரிமைத்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என கூறி தனது கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  
 

சார்ந்த செய்திகள்