Skip to main content

திமுக, அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி - பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

ிப

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களில் திமுகவும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. 

 

தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைத் தாண்டி அமமுக, பாஜக உள்ளிட்ட சில கட்சிகளும் சில பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக அமமுக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது. அதைப்போல பாஜக முதல்முறையாக இரணியல் பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 சுயேட்சைகளும், ஒரு நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் இங்கு ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்