திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கும் உசேன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவினால் காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். ஆயிரம் விளக்கு உசேன், திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.