சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் ஜூன் 7, 8 தேதிகளில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்று அனுப்பியிருந்தனர். அதில் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான சொத்து விவரங்கள், கட்டளைதாரர்கள், நகைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கணக்கெடுப்பு செய்வதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இந்தநிலையில் திங்கட்கிழமை கோவில் தீட்சிதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி, பிரதமர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
கோவிலில் கணக்கு வழக்கு உள்ளிட்ட அனைத்தும் சரியாக இருந்தால் தீட்சதர்கள் ஏன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே கோவிலில் ஏதோ தவறு நடைபெறுவதால் தான் எதிர்க்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டிப்பாகக் கோவிலில் உள்ள சொத்து விவரங்களை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சிதம்பரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இது குறித்த விவரம் அறிய நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் கார்த்திக்கிடம் கேட்டபோது வழக்கறிஞரை கேட்டு தான் பேச முடியும் என கூறினார்.