தீபாவளி: டாஸ்மாக், போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க அனுமதியில்லை!
தீபாவளி திருநாளை முன்னிட்டு மக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்வதற்காக டாஸ்மாக் மது விலையை அதிகப்படுத்தினாலும் விற்பனை சூடு பிடிக்கிறது.
தீபாவளியில் டாஸ்மாக் கடைகளில் ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் வருமானம் பார்த்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரக மதுபானங்களும் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 12ஆம் தேதி (இன்று) முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் ஊழியர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் விற்பனை விவரத்தை தினமும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஆன்லைனில் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கும் விடுப்பு கிடையாது!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கு இடையிலும் 11 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அக்டோபர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஜெ.டி.ஆர்.