Published on 07/12/2021 | Edited on 07/12/2021
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மாதத்தில் அதிக மழை பெய்தது. அதனால் குளம், குட்டை, கிணறு என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியும்வருகிறது. சில இடங்களில் அதீத கனமழை பெய்ததால் விவசாயமும் பாதிப்படைந்துள்ளது. மேலும், ஆங்காங்கே நீர்நிலைகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
இந்நிலையில், திருச்சி அருகே ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் அதிகரித்தது. இந்த தண்ணீர் வயலூர் சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றின் கரை வழியாக பாத்திமா நகரில் செல்வதைத் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி கரையைப் பலப்படுத்தும் பணி நேற்று (06.12.2021) இரவு தீவிரமாக நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் சிவராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.