




Published on 14/09/2021 | Edited on 14/09/2021
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், பேரிடர் கால ஒத்திகை பயிற்சிக்கான கண்காட்சி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பெரும் மழை, வெள்ளம், கடல் சீற்றத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இராயபுரம் மற்றும் தண்டையார் பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.