Skip to main content

டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்... சிலமணி நேரத்தில் விசாரணை அதிகாரி மாற்றம்!  

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

DGP Prajesh Das Case... Investigating officer changed!

 

தமிழக கூடுதல் டி.ஜி.பி.ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் அடிப்படையில், இந்தப் புகாரானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.

 

இதையடுத்து, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இந்நிலையில், காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கே இந்த நிலையா என, தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான புகாரை இன்று (01.03.2021) பிற்பகல் தானாக முன்வந்து விசாரிக்க இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். மேலும் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ராஜேஷ் தாஸ், கட்டாயக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஆறு பேர் கொண்ட விசாகா குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி கோமதி நியமனம் செய்யப்பட்டிருந்த சிலமணி நேரத்தில், தற்பொழுது விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி, எஸ்.பி. முத்தரசி இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி மீதான வழக்கு என்பதால் ஏ.டி.எஸ்.பி ரேங்கில் உள்ள அதிகாரிக்குப் பதில் டி.எஸ்.பி ரேங்க் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்