இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடலையும் உறவுகளையும் பலவீனமாக்கும் மதுக்கடைகளை திறப்பதைவிட உள்ளத்திற்கு உந்து சக்தியை தரும் ஆலயங்களை திறக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 7 ம்தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கும், மது இல்லாத தமிழகத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் சான்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் திறக்கப்பட்ட மதுக்கடைகளுக்கு எல்லைப்பகுதியிலுள்ள மக்கள் சென்றதையும், தமிழகத்தில் விற்பனையாகும் கள்ளச்சாராயத்தை தடுப்பதற்காகவும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கிறோம் என அரசு விளக்கமளித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
சமூக விலகலை கடைபிடிக்க காவல்துறை உதவியுடன் நடைபெற்ற கோயம்பேடு சந்தை மூலம் கரோனோ தொற்று நோய் தமிழகத்தின் மூலை முடுக்களைகூட பதம்பார்த்து வரும் நிலையில், மதுக்கடைகளை திறந்து மற்றொரு கூட்டத்தை கூட்டினால் அதன் தாக்கம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
அதற்கு மாற்றாக உள்ளத்திற்கு அமைதியையும், உயர்சிந்தனையையும் அளிக்கும் கோவில்களை திறந்து சமுக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிப்பதோடு, பட்டினியோடு போராடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினால் அனைத்து தரப்பிரனாலும் அது வரவேற்று பாராட்டப்படும். குறிப்பாக இல்லத்தரசிகளின் இதயங்களில் இந்த அரசின் செயல்பாடுகள் எப்போதும் பதிந்திருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.