திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 பேரூராட்சிகள் உள்ளது. இதில் திருச்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 10- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன், தாத்தையங்கார் பேட்டை பேரூராட்சியில் 11- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜலெட்சும் கணேசன், உப்பிலியபுரம் பேரூராட்சியில் வார்டு 1- ல் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிகலாதேவி ராஜசேகரன், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 7- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சங்கீதா சுரேஷ், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் உள்ள 7- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேகலா, மேட்டுபாளையம் பேரூராட்சியில் உள்ள 11- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சௌந்தர்ராஜன், மண்ணச்சநல்லூரில் உள்ள 14- வது வார்டில் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவசண்முககுமார், தொட்டியும் பேரூராட்சியில் 5- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரண்யா பிரபு, உள்ளிட்டவா் பேரூராட்சி மன்றத் தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதேபோல், திருச்சி மத்திய மாவட்டம், சிறுகமணி பேரூராட்சியில் உள்ள 1- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமுதவள்ளி தங்வேலு, பூவாளுா் பேரூராட்சியில் உள்ள 8- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புவனேஸ்வரி பால்ராஜ், புள்ளம்பாடி பேரூராட்சியில் 3- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோகிலா முத்துக்குமார், கூத்தைப்பார் பேரூராட்சியில் உள்ள 15- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வராஜ், பொன்னபட்டி பேரூராட்சியில் உள்ள 15- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரண்யா நாகராஜ் ஆகியோர் பேரூராட்சி மன்ற தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 5 நகராட்சிகள் உள்ளது. இதில், திருச்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள துறையூர் நகராட்சியில் 18- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வராணி மலர்மன்னன், முசிறி நகராட்சியில் உள்ள 19- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலைச்செல்வி சிவக்குமார், திருச்சி மத்திய மாவட்டம், லால்குடி நகராட்சியில் உள்ள 21- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை மாணிக்கம், திருச்சி தெற்கு மாவட்டம், துவாக்குடி நகராட்சியில் உள்ள 12- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காயாம்பு, மணப்பாறை நகராட்சியில் உள்ள 25- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மைக்கேல்ராஜ் ஆகியோர் நகர்மன்ற தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மாநகராட்சி மேயர், துணை மேயர், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நாளை (04/03/2022) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.