10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2-விற்கு கரோனா ஊரடங்கால் நடத்தப்படாத ஒரு தேர்வு, ஜூன் 1 முதல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இன்று தலைமை செயலகத்தில் பள்ளிகல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே எழுதவும், அதேபோல் சமூக இடைவெளியுடன் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மற்றொரு அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை நாளை மாலைக்குள் பள்ளிகள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிற மாவட்ட/ மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு பாஸ் வாங்கி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் மே 21 க்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு வராத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.