'மாண்டஸ்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். குறிப்பாக ராமேஸ்வரம் பாம்பன், சென்னை காசிமேடு பகுதிகளில் உள்ள மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.
இன்றும் பழவேற்காட்டில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. புயல் கரையைக் கடந்தும் காற்றின் வேகம் குறையாமல் இருப்பதால் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழவேற்காட்டில் உள்ள மீன் ஏலக்கூடம் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.