Skip to main content

டெல்லியிலுள்ள தப்லீக் ஜமாத்தினர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

Delhi tablighi jamaat -  highcourt order to answer govt

 

டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத்தினரை மீட்டுவர தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் சம்மந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, டெல்லியில் முறையான அடிப்படை வசதியில்லாமல் தவித்துவரும் 500-க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரைத் தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி,  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக் சார்பில், ன்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்யநாராயணன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் தங்கள் மாநிலங்களில் சிக்கியுள்ள வெளி மாநிலத்தவர்களை,   சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களுடன் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, மாநில அரசு வழக்கறிஞர், இதுதொடர்பாக சிறப்பு அதிகாரி மற்றும் மாநிலம் வாரியாகத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இணையதளங்கள் துவங்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறுவதாகவும், டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத்தினர் போல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 


மனுதாரர் சார்பில், கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், தமிழகம் திரும்ப ஆகும் செலவை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு அவர்களை விரைவாக மீட்டுக் கொண்டு வருவதற்காக  என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  என்பதை, எழுத்துபூர்வமாக மே 12- ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்