Published on 08/08/2018 | Edited on 08/08/2018

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் இன்று காலை வைக்கப்பட்டது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காந்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
இந்நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மீ கட்சி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் நேதாஜி அரங்கத்தில் உள்ள திமுக தலைவர் கலைஞர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.