கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த 11 கிமீ தூரத்தில் மதுராந்தகநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் சோழர்கால ஆட்சியில் மதுராந்தகசோழர் தில்லை நடராஜர் வணங்குவதற்கு வரும்போது தங்கியுள்ளதால் இந்த ஊரை அவரது பெயரை கொண்டு அழைப்பட்டு வருவதாக அவ்வூரில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இந்த ஊரின் நிலத்தடி மற்றும் குடிநீர் ஆதாரத்தை காக்கும் வகையில் திருக்குளம், ஆழங்காத்தா குளம், மொளலிகுளம் உள்ளிட்ட மூன்று குளங்கள் உள்ளது. இந்த குளங்கள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து குளங்கள் முழுவதும் ஆகய தாமரை செடிகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு அவதி அடைந்து வருவதாக கூறுகிறார்கள்.
இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமச்சாரி என்பவர், மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வனுக்குக்கு மனு அனுப்பியுள்ளதாக கூறிய அவர், இந்த ஊரில் உள்ள குளங்களில் டாஸ்மாக் மதுபாட்டில், கப், தண்ணீ பாட்டில் ஆகாய தாமரை செடிகள் என அசுத்தமாக உள்ளது. இந்த குளங்களில் கோடையில் கால்நடைகள் தண்ணீர் குடிக்க, பொதுமக்கள் குளிக்க என அனைத்து மக்களின் பயன்பாட்டுக்கும் உதவியாக இருக்கும். இப்படியுள்ள குளத்தில் தற்போது கால் வைக்கவே பயமாக உள்ளது. கதண்டு என்ற விச வண்டுகள் மற்றும் அதைவிட கொடுமையாக மதுபான பாட்டிலை குடித்துவிட்டு உடைத்து போடுகிறார்கள்.
குளத்தில் கால் வைக்கவே பயமாக உள்ளது. நிலத்தடி நீர் கொஞ்சம் உப்பாக மாறியுள்ளதால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் அமைக்கப்பட்டது. அமைக்கபட்டதோடு அது அப்படியே கிடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
தனச்செல்வி என்ற பெண் கூறுகையில், ஊரில் கழிப்பிடத்திற்கு செல்ல இடமில்லை. தற்போது அனைத்து வயல்களிலும் மகசூல் போட்டாச்சு இதனால் ஊரில் உள்ள மக்கள் ஆண், பெண் என அனைவரும் சாலையின் இரு புறமும் இருட்டு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கிறார்கள். இதனால் நோய் பரவும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு உனடியாக தலையீட்டு இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.