Skip to main content

ஆக்சிஜன் அகற்றியதாக புகார் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

cuddalore govt hospital patient incident admk leader eps tweet

 

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திட்டக்குடி ராஜாவுக்கு ஆக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யாமல், ஆக்சிஜன் மாஸ்க் - சிலிண்டரை அரசு மருத்துவர் ஒருவரே எடுத்துச் சென்றதனால் உயிரிழந்ததுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.   

cuddalore govt hospital patient incident admk leader eps tweet

 

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை பெறுவோருக்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்வதிடவும், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களைக் காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

 

இதனிடையே, கடலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், "கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிக்கு மருத்துவர்கள் ஆக்சிஜனை அகற்றவில்லை. கரோனா நோயாளிக்கு உணவளிக்க ஆக்சிஜனை அகற்றியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்