Published on 20/10/2020 | Edited on 20/10/2020

தி.மு.க முன்னெடுத்திருக்கும் இணையவழி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பாக, நேற்று கடலூர் மேற்கு மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில், நேற்று தி.மு.கவின் இணையவழி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பாக, இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுடன் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி.வெ.கணேசன் ஆலோசணை நடத்தினார். இதில் இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி தகவல் தொழில்நுட்ப மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.எஸ்.ஆனந்த் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.