Published on 26/11/2020 | Edited on 26/11/2020
கடலூர் மாவட்டம், ரெட்டி சாவடி குமாரமங்கலத்தில் 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி விளக்கினார்.
அதைத் தொடர்ந்து, தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது முதல்வருடன் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.