Skip to main content

கடலூர்; டிச. 4, 5 தேதிகளில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - அமைச்சர் சம்பத் வேண்டுகோள்

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
கடலூர்; டிச. 4, 5 தேதிகளில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - அமைச்சர் சம்பத் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலூர் மாவட்டத்தின் பிரதான சாலைகள் பல குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் விதமாக அலங்கோலமாக காட்சி தருகிறது. ஏற்கனவே கடலூர் முதுநகர் சாலை, கடலூர் புறவழிச்சாலையான ஜவான் பவன் சாலை, கடலூரிலிருந்து செம்மண்டலம், நெல்லிக்குப்பம் சாலைகள் ஆகியன படுமோசமான நிலையில் உள்ளது.



தற்போது மஞ்சகுப்பம் நேதாஜி சாலை மற்றும் புதுச்சேரி செல்லும் சாலையிலும் பெரிய பெரிய பள்ளங்களோடு அபாயகரமாக காட்சி தருகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பிரதான சாலைகளுகளும் படுமோசமான நிலையிலே உள்ளன. இயற்கைபேரிடர்களை அடிக்கடி சந்தித்து வரும் கடலூர் மாவட்டத்தில் தற்போது அதிக அளவில் மழை பெய்யாத போதிலும் மாவட்டத்தின் அத்துனை சாலைகளும் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. குண்டும் குழியுமான சாலைகளால் போக்குவரத்து நெரிசலோடு மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் பயணித்து கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்கள்  பெரிய பெரிய பள்ளங்களில் சிக்கி கீழே விழுவதும் நடந்து வருகிறது...

தொடர் மழையால் கிராம இணைப்பு சாலையில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் வேப்பூர் அருகேயுள்ள உள்ள கீழக்குறிச்சி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

மணிமுத்தாற்றில் 23000 கன அடி வெள்ளம் வருவதால் நல்லூர் – இளங்கியனூர் இடையேயான தரைப்பாலம், பரவளூர் – எருக்கன்குப்பம் இடையேயான தரைப்பாலம் சவுந்திரசோழபுரம்- கோட்டைக்காடு இடையேயான தரைப்பாலம் ஆகியன வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.



விருத்தாசலம், திட்டக்குடி, வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்குடி என மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  

விருத்தாசலம் அருகே மேலப்பாலையூர்   கிராமத்தில் வீடு சுவர் இடிந்து கல்யாணி (65), அவரது பேரன் செல்வகணபதி(17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்நிலையில் கடலூர் பகுதியில் ஞானாம்பாள் நகர், போலிஸ் குடியிருப்பு, பீமாராவ் நகர், ஈச்சங்காடு, நொச்சிக்காடு, கடலூர் முதுநகர் பகுதிகளில்  மழை சேத பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடனூரேவுடன்  பார்வையிட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, “வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு கருதி வரும் 4, 5 தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும், அந்நாட்களில் மக்கள் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் எம்.சி.சம்பத் கனமழை பெய்யும் என்பதால், அப்போது மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், புயல் ஓயும் வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்