கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் திருசென்னபுரம் கிராமதிலுள்ள நியாவிலை கடை உள்ளது. இதில் பொதுமக்களுக்கு 20 கிலோ அரிசிக்கு பதில் 15 கிலோ மட்டுமே ஒவ்வொரு மாதமும் வழங்கியுள்ளனர். மேலும் எண்ணை, பருப்பு உள்ளிட்ட இந்த பொருட்களும் வழங்குவது இல்லை. இதுகுறித்து அப்பகுதிமக்கள் கேட்கும் போது அரிசியின் அளவை குறைத்து தருகிறார்கள். கிராம புறங்களுக்கு எண்ணை பருப்பு உள்ளிட்ட எந்த பொருட்களும் அதிகாரிகள் கொடுப்பது இல்லை என்று கூறியுள்ளார்.
பொதுமக்கள் இதுகுறித்து உங்க மேல் அதிகாரிகளிடம் புகார் கூறுவோம் என்று கூறியுள்ளனர். நீங்க எங்க வேண்டும் என்றாலும் போய் கூறிக்கொள்ளுங்கள் என்று மிகவும் பொதுமக்கள் வேதனையடையும் வார்த்தைகளால் பேசியுள்ளார் நியவிலைகடையின் ஊழியர். இந்த நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் காட்டுமன்னார்கோயில் வட்டவழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டவழங்கல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் இனிமேல் பொதுமக்களுக்கு கொடுக்கவேண்டிய நியாவிலை கடை பொருட்கள் கிடைக்க உறுதியளித்தனர். இதனைதொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விளக்கிகொள்ளப்பட்டது.