Published on 30/12/2020 | Edited on 30/12/2020
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
அதில், 'பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர், அரசு, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய வாரியம் அமைக்கப்படும். 62,661 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு நலவாரியம் தொடங்கப்படும். தற்போது 1,250 பட்டாசு ஆலைகளும், 870 தீப்பெட்டி ஆலைகளும் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. 2,210 ஆலைகளில் பணிபுரியும் 1.20 லட்சம் தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர்ந்துப் பயன்பெறலாம். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் சென்னையில் செயல்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.