நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சூழுரைத்த அந்த நக்கீரனார் பெயரில் இயங்கிவரும் நக்கீரன் வாரம் இருமுறை இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான நக்கீரன் கோபால் நேற்று காலை அராஜகமான முறையில் அஇஅதிமுக அரசு திடீரெனக் கைது செய்தது.
இதை அறிந்த பஹ்ரைன் நாட்டில் வாழ் தமிழர்கள் பலரும் மற்றும் தமிழ் அமைப்புகளும் தங்களின் வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்கள் . அதைக் கண்டித்து திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தை சமூக இணையதளத்தில் பதிவு செய்ததுடன் மருத்துவமையில் நேரில் சென்று ஆசிரியர் கோபால் அவர்கள் நேரில் சென்று சந்தித்தும் வந்தார்.
இதேவேளையில் நேற்று காலையில் பஹ்ரைன் திமுக வின் நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் ஆம்பல் குணசேகரன் தலைமையிலும், இணைச்செயலாளர் திருமேனி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது . அதில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் அவர்களின் கைதிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொண்டனர். கூட்டத்தில் முதன்மைச்செயலார் சாமி, செயலாளர் சுல்தான், பொருளாளர் இஸ்மாயில் , அசோக், இளைஞர் அணி செயலாளர் செந்தில், சிங்கமுத்து, லெனின், நாதன் , ஆரிப், ஜாஹிர், செல்லப்பா மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.