Skip to main content

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்

Published on 22/01/2018 | Edited on 22/01/2018
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்

சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் தமிழக அரசு உயர்த்தியுள்ள வரலாறு காணாத பேருந்துக்கட்டண உயர்வைக் கண்டித்தும், உடனடியாக கண்டன உயர்வை திரும்பப்பெற திரும்பப்பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியத் தலைநகரிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்கள் கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாண்டிச்செல்வி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரெகுநாதன், பாலசுப்பிரமணியன், பழனிவேல், ஆறுமுகம், தமிழரசன், இளங்கோவன், நாடியம்மை உள்ளிட்டோர் பேசினர்.

கந்தர்வகோட்டையில் ஒன்றியச் செயலாளர் எஸ்.ரெத்தினவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.வீராச்சாமி, ஜி.பன்னீர்செல்வம், இளையராஜா, பழனியாண்டி, சாமிநாதன், மணி, சங்கிலிமுத்து, மாரிமுத்து, புன்னியமூர்த்தி, சாந்தி உள்ளிட்டேர் பேசினர். கறம்பக்குடியில் ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பனர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.மணிவேல், சத்தியமூர்த்தி, வீரமுத்து, தங்கப்பா, மாரிமுத்து, அரிபாஸ்கர், இளமாறன், பழனியப்பன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

அறந்தாங்கியில் நகரச் செயலாளர் கே.தங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.முத்துராமலிங்கம், ஏ.பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் லெட்சுமணன், கர்ணா, ஜெயராமன், சாந்தா, ராஜா, மேகவர்ணம், சாத்தையா, ஜான் உள்ளிட்டோர் பேசினர். கீரனூரில் ஒன்றியச் செயலாளர் கே.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பீமராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேகர், சின்னத்துரை, சாந்தா, நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அன்னவாசலில் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.சி.ரெங்கசாமி, எம்.ஜோஷி, ஆறுமுகம், கண்ணன், ரகுபதி உள்ளிட்டோர் பேசினர். ஆவுடையார்கோவிலில் ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ்; தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வே.வீரையா, எம்.எஸ்.கலந்தர், எஸ்.காசி உள்ளிட்டோர் பேசினர்.

பொன்னமராவதியில் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.ராமசாமி, கே.குமார், நாவலன், பிரதாப்சிங், சிங்காரம், பிச்சையம்மாள், மாயழகு உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமயத்தில் ஒன்றியச் செயலாளர் சி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வீரமணி, வீரையா, வெள்ளைச்சாமி, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணமேல்குடியில் ஒன்றியச் செயலாளர் கரு.ராமநாதன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜகுபரலி, ரபீக்கான், கருணா, பாரூக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்