கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர். சில நாட்கள் சென்னையில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, தடுப்பூசி போடும் முகாம்கள் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு முகாம்கள் திறக்கப்பட்டு மீண்டும் தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்நிலையில், சென்னையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று (21.07.2021) முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
வேலை மற்றும் உயர்கல்வி பயில வெளிநாடு செல்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது கையிருப்பில் 9,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இருக்கும் நிலையில், காலை 9 மணிமுதல் மக்களுக்குத் தடுப்பூசிகள் போடப்படுகிறது. அதேபோல் இன்று தமிழ்நாட்டிற்கு 5 லட்சத்து 42 ஆயிரத்து 280 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.