Skip to main content

திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
 திருச்சியில் டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடத்த
உயர்நீதிமன்றம் அனுமதி!

செப்.19ம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் டிடிவி தினகரன் அணியினர் கூட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.

திருச்சியில் தி.மு.க. சார்பில் நீட் எதிர்ப்பு கூட்டம் திருச்சி உழவர் சந்தையில் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள், அதே நேரத்தில் பிஜேபி சார்பில் நீட் ஆதரவு கூட்டம் அதே இடத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக போட்டி அணியான டிடிவி தினகரன் அணியினர் நீட் ஆதரவு கூட்டம் அதே இடத்தில் செப்டம்பர் 16 தேதி நடைபெறும் என்று அறிவித்தனர். இந்த நிலையில் மாநரகராட்சி நிர்வாகம் அந்த இடம் வேறு கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது என்று இடம் கொடுக்க மறுத்தனர்.

பின்னர் செப்டம்பர் 19 தேதி இடம் கேட்டு தினகரன் அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் சார்பில் மனு கொடுத்தனர். இந்த முறை மாநாகராட்சி நிர்வாகம் மைதானத்தை மறு சீரமைப்பு செய்ய போகிறோம் என்று கூட்டம் நடத்த அனுமதி மறுத்தது. இதையடுத்து தினகரன் அணி மா.செ. சீனிவாசன் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் 19ம் தேதி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் டிடிவி தினகரன் அணியினர் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

- ஜெ.டி.ஆர்.
 

சார்ந்த செய்திகள்