
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினி கடந்த மே 25 ஆம் தேதி பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றது. கோவில் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆண்டனி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘ சமயபுரம் கோயிலில் மசினி என்ற 9 வயது குட்டி யானையைப் பாகன் கஜேந்திரன் பராமரித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யானை, பாகன் கஜேந்திரனை திடீரென தூக்கி வீசி மிதித்து கொன்றது. அந்த யானை, திருச்சி வனப்பகுதியில் இருந்த யானை, அதுவும் குறிப்பிட்ட சில மாதங்களில்தான் கொண்டு வரப்பட்டது. காட்டில் வளர்ந்த யானையை கோயிலுக்குக் கொண்டு வரவும்தான், அதற்கு திடீரென்று கோபம் ஏற்பட்டு பாகனைக் கொன்றது. எனவே, யானைகளை வனப்பகுதி தவிர மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு விசாரித்து வருகிறது. அறநிலையத் துறை சார்பில் யானைகளை கோயிலில் வளர்ப்பது பாரம்பரியமான பழக்க, வழக்கம், அதை முற்றிலும் தடுக்க முடியாது என்றும் யானைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நீதிபதிகள் மசினி யானைக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அப்போது நீதிபதிகள் யானை மசினியை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அனுப்ப உத்தரவிட்டனர்.