Skip to main content

சாலை விபத்தில் சிக்கிய தம்பதி.. பாதுகாப்பு வாகனம் கொண்டு உதவிய அமைச்சர்! 

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

Couple caught in road accident .. Minister who helped with the security vehicle!

 

காட்டுமன்னார்கோவில் சகஜானந்தா நகரைச் சேர்ந்தவர் சேகர் (62). அவரது மனைவி சுலோச்சனா (58). நேற்று (செப்.19), ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருவரும் இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடுஞ்சேரி தேவாலய வழிபாட்டுக்கு வீராணம் ஏரிக்கரை சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தனர்.

 

அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த விபத்தில், கணவன், மனைவி இருவரும் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தனர். அப்போது, அந்த வழியாக காரில் சென்ற தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சாலையில் இருவர் காயத்துடன் கிடப்பதைப் பார்த்து தனது வாகனத்தை நிறுத்திக் கீழே இறங்கினார்.

 

Couple caught in road accident .. Minister who helped with the security vehicle!

 

வயதான தம்பதியரை மீட்டு அவருடைய பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றிச் சென்று காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அவரது உதவியாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் தனி உதவியாளர் ஆகியோர் அந்தத் தம்பதியரை மீட்டு, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, புத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். அமைச்சரின் இந்தச் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்