Skip to main content

கரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு என்.எல்.சி ரூபாய் 25 கோடி நிதியுதவி! 

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 24- ஆம் தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், இன்று (31/03/2020) 7- வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 
 

coronavirus pm cares fund nlc 25 crores has give


அதன் தொடர்ச்சியாகச் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னணி தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பிரதமர் நிவாரண நிதிக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் நிதி அளித்து வருகின்றனர். 

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா (அனல் மின் நிலையம்) இயங்கி வருகிறது. தற்போது என்.எல்.சி நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி என்.எல்.சி ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 5 கோடி மற்றும் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து 20 கோடி என மொத்தம் 25 கோடியைப் பிரதமரின் நிவாரண நிதி வங்கிக் கணக்கில் என்.எல்.சி அதிகாரிகள் செலுத்தினர்.

 

சார்ந்த செய்திகள்