கரோனா பரவலை தடுக்க வேலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருளான பெட்ரோல், டீசல் நிலையங்கள் திறந்துயிருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சும்மாவே சுற்றிக்கொண்டு வருவது அதிகமாகியுள்ளது. தாங்கள் ஏதோ சாகசம் செய்ய வந்தவர்கள் போல் நகரை வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் செல்லும் வண்டியில் பெட்ரோல் கிடைப்பதால் தான் இந்த ஊர் சுற்றல் நடக்கிறது என்பதால் அதில் கட்டுப்பாடு கொண்டு வர முடிவு செய்துள்ளது அரசாங்கம். அதன்படி வேலூர் மாவட்டத்தில் மதியம் 2 மணி வரை மட்டும்மே பெட்ரோல் நிலையங்கள் திறந்துவைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்ட பெட்ரோல், டீசல் நிலையங்கள் சங்கம் மதியம் 2 மணி வரை மட்டும்மே திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களை பிடித்து அவர்களது வாகன ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.