நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி, சிக்கல் சிங்காரவேலர் உள்ளிட்ட பேராலயங்கள் வெறிச்சோடி கிடக்கிறது.
நாட்டையே அச்சுறுத்தி வரும் கரோனா எனும் கொடிய நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. காரைக்கால், தமிழக எல்லையான வாஞ்சூர் சோதனை சாவடி உட்பட 11 எல்லை பாதுகாப்புச்சாவடிகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், நாகை, கீழ்வேளூர், கிழக்கு கடற்கரை சாலைகளின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இருச்சக்கர வாகனங்களில் வருபவர்களை காவல்துறையினர் விசாரித்து திருப்பி அனுப்புகின்றனர். உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர் உள்ளிட்ட நாகை மாவட்டத்தின் பல்வேறு வழிபாட்டு தளங்கல், சுற்றுலா தளங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்லாத நிலையில், பரபரப்பாக காணப்படும் நாகை துறைமுகமும் மீன் விற்பனை இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
144 தடை உத்தரவை தொடர்ந்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மீறிவரும் பொதுமக்கள் ஒன்றுகூடாமல் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பாக போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.