Published on 07/04/2020 | Edited on 07/04/2020
கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 690 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பை திரும்ப பெருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.