கரோனா வைரஸ் பரவலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழல் தொடங்கியுள்ளது. இதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மருத்துவமனைக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவ சேவைக்கான பொருட்களை பெற ஒவ்வொரு எம்.எல்.ஏவும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதியை ஒதுக்கி வருகின்றனர்.

அதன்படி, வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவரும், திமுகவின் பொதுச்செயலாளராக வரவாய்ப்புள்ள துரைமுருகன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்ச ரூபாயை ஒதுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரத்துக்கு கடிதம் வழங்கியுள்ளார். அனைத்து ஆளும்கட்சி – எதிர்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் 25 லட்சம் ஒதுக்கிவர, எதிர்கட்சி துணை தலைவர் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கி தந்துயிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அதேபோல் வேலூர் நாடாளமன்ற உறுப்பினரான கதிர்ஆனந்த், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். இந்த தொகையினை வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு என ஒதுக்கியுள்ளார்.