Published on 30/03/2020 | Edited on 30/03/2020
கோவையின் மிக முக்கியமான துணிக்கடைகளில் ஒன்று ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ். அதன் உரிமையாளர் சிவா. அவர் சமூக சேவைகளில் அக்கறை உள்ளவர். கரோனோ நோய்த் தொற்றால் மக்கள் அவதியுறுவதைக் கண்ட அவர், கரோனா நோயைக் கட்டுப் படுத்த வேண்டும் என விருப்பம் கொண்டதோடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் 1 கோடி ரூபாயை நிதி அளித்தார்.
பெரிய பெரிய நகைக்கடைகள், துணிக்கடைகள் என கேரள முதலாளிகள் கோவை மக்களை வைத்து சம்பாதித்து விட்டு கரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டதைப் போல வீடுகளுக்குள் அடைக்கலம் ஆகி விட்ட நிலையில் தமிழரான சிவா 1 கோடி ரூபாய் நிதி அளித்து இருப்பது கோவை மக்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது.