Skip to main content

அஞ்சியபடியே விவசாயப் பணிகளைச் செய்யும் விவசாயிகள் !

Published on 03/04/2020 | Edited on 03/04/2020
b

 

கொரோனா வைரஸ் விவகாரத்தால் ஊரடங்கிக்கிடக்கிறது.நாகை, திருவாரூர், தஞ்சை காரைக்கால் மாவட்டச் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி கிடக்கிறது. கொரோனா விவகாரத்தால் நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குத் தீயணைப்புத்துறை ஊழியர்கள் கிரிமிநாசினி தெளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

அதேபோல மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட மக்கள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்துவருகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்துகொடுத்துள்ளனர்.இதேபோல கிரிமி நாசினி, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 

நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்வதால்,கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.அதே போல திருவாரூர், தஞ்சை, காரைக்காலிலும் ஊரடங்கிக்கிடக்கிறது.விவசாய கூலித் தொழிலாளர்கள் அமைதியான முறையில் தங்களது விவசாயப் பணிகளைச் செய்துவருகின்றனர்.

 

டெல்டா மாவட்டங்களில் கோடை சாகுபடியாகப் பருத்தி சாகுபடி பணிகள் நடந்துவருகிறது.பருத்திக்குத் தண்ணீர் இறைத்து காலத்தில் கங்கு வெட்டவில்லை என்றால் அந்தப் போக பருத்தி விலைச்சல் இல்லாமல் போய்விடும் என்பதால், விவசாயிகள் கூட்டம் கூட்டமாகக் கங்கு வெட்டாமல் பிரிந்து, பிரிந்து வெட்டுகின்றனர். அதே போல கை டிராக்டர்களை கொண்டும் கலைகளை வெட்டும் பணியைப் பயத்துடன் செய்துவருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்