தமிழக அரசு சார்பில், கரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகள் என வெளியிட்ட பட்டியலில் சென்னை, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிபேட்டை, திருவாரூர், மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கரூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு நிறம் வர்ணம் தீட்டப்பட்டு வெளியாகி உள்ளது.
ஆக 16 மாவட்டங்கள் சிவப்பு நிறம் பூசப்பட்டு உள்ளததால், டேஞ்சர் பகுதியில் இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 36 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதிதாக மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எண்ணிக்கை 39 பேராக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் பீமநகர், தென்னூர், தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் மூவரும் ஏற்கனவே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். புதிதாக வேறு எந்த பகுதியிலும் பாதிப்பு ஏற்படவில்லை. திருச்சி மாநகரில் இந்த 3 பேர் வசிக்கும் பகுதிகளும் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். தமிழகத்தில் அதிகப்பட்சமாக இன்று திருவள்ளுவர் மாவட்டத்தில் 16 பேர் உறுதி செய்யப்பட்டது. அரசு கூறும் அறிவுறுத்தல்களை பின்பற்றி விழிப்புடன் செயல்படுவோம் எனக்கூறியுள்ளனர்.