Published on 26/06/2020 | Edited on 26/06/2020
தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் 30-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
இந்நிலையில் சென்னை அல்லாத பிற மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று வேலூரில், 147 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை 1,013 ஆக அதிகரித்துள்ளது. இதில் 180-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 147 பேரில் 69 பேர் நேதாஜி மார்க்கெட்டோடு தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.