Skip to main content

தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி... தமிழக அரசு அறிவிப்பு!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

corona

 

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

 

கரோனா தடுப்பு பணிகள் காரணமாக, பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும். தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு  வெளியிட்டிருந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

கடந்த ஜனவரி 16-ஆம் தேதிலியிலிருந்து கரோனா தடுப்பூசி தமிழகத்தில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 150 சுகாதார பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 34 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் முன்களப்பணியாளர்கள் மட்டும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்