Skip to main content

தமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறித்த புள்ளிவிபரங்கள்....

Published on 16/01/2021 | Edited on 16/01/2021
corona injected to people in 160 centres

 

கரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ‘கோவிஷீல்ட்’, ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது .

 

அதன்படி தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (16/01/2021) தொடங்கி வைத்தார். தமிழகத்தைப் பொருத்தவரை, மதுரையில் கரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்வை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். 

 

தமிழ்நாட்டில் 160 மையங்களில் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 6 மையங்களில் கோவாக்சின் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்பட்டது,.கோவாக்சின் தடுப்பூசி 600 பேருக்கு செலுத்தத் திட்டமிடப்பட்ட நிலையில் 99 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது.

 

பெரம்பலூரில் இன்று 100 பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், 2 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. மிகக் குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதற்கு தயக்கம் காரணமா என ஆய்வு செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

 

தமிழகத்தில் இன்று மட்டும் 2684 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 99 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 2783 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதுதவிர ஆறு லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 


 

சார்ந்த செய்திகள்