Published on 25/06/2021 | Edited on 25/06/2021

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் கூடுதல் தளர்வுகளை வழங்குவது தொடர்பாக இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட திவாகரனுக்கு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.